ஃபேஸ்புக்கில் காதலித்த தனது காதலன் கல்யாண செய்துகொள்வதாக பெண்ணை ஏமாற்றி வரவழைத்து ஹோட்டலில் ரூம் போட்டு நாசம் செய்தது ஏமாற்றியதால், புகார் கொடுத்தான் போலீஸ் கண்டுகொள்ளாததால். கடைசியில் அந்த பொண்ணு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி ஜோதி நகரில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகள் ஒரு பிரைவேட் காலேஜில் படித்து வந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவர் ஃபேஸ்புக்கில் பழக்கமானார். முதலில் நடிப்பாக பழகிய இவர்கள் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. 

முதலில் போனில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த இவர்கள், நேரில் சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.  விரைவில்  உன்னையே கல்யாணம் செய்துக்கறேன் என்று பாலன் சொல்லியே பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். கல்யாண ஆசை காட்டியதால் அதை நம்பி மாணவி வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.

வீட்டை விட்டு ஓடிவந்த இளம்பெண்ணை கோயமுத்தூருக்கு கூட்டி சென்று, ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து அந்த பெண்ணை சீரழித்தார் பொள்ளாச்சி பாலன். சுமார் ஒரு வாரம் தங்கி பலமுறை நாசம் செய்தபிறகு, திடீரென ஒரு சண்டையை போட்டார் பாலன். கல்யாணம் செஞ்சிக்க சர்ட்டிபிகேட் வேணும், நீ ஏன் கொண்டு வரல? என்று பிரச்சனை செய்தார். கோவையிலிருந்து சேலத்துக்கு கூட்டிச்சென்று அங்கேயே நடுரோட்டில் இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார் பாலன்.

இப்போதுதான் பாலன் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த இளம்பெண், நேராக கிருஷ்ணகிரி போலீசில் புகார் தந்தார். ஆனால் போலீசாரோ, சம்பந்தப்பட்டவர் பொள்ளாச்சி என்பதால் அங்கே போயி புகார் கொடுக்க சொன்னதால், பொள்ளாச்சிக்கு சென்று புகார் தந்தார். ஆனால் அவர்களோ, கிருஷ்ணகிரி போலீசில் புகார் கொடுக்க சொல்லி திருப்பி அனுப்பினார்கள்.

இப்படியே 2 மாசமாக கிருஷ்ணகிரிக்கும் பொள்ளாச்சிக்கும் போலீசார் இளம்பெண்ணை இன்றைக்கு வா, நாளைக்கு வா என சொல்லியே அலைக்கழித்தனர். ஆனால், கடைசிவரை புகாரும் எடுக்கவில்லை. ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி ஒருத்தனை நம்பி ஏமாந்து, சீரழிந்து, இப்போது ஒரு புகார் தந்தால்கூட எடுக்க மறுக்கிறார்களே என மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் கடைசியாக தற்கொலையே செய்து கொண்டார். இப்போது மாணவியின் உடல் கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரியில் பிரேதப பரிசோதனைக்காக வைத்திருக்கின்றனர்.

மகளை பறிகொடுத்தபிறகு பெற்றோர் பாலன் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது.