ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வழக்கில் பிடிபட்டவர்களிடம் நடந்த விசாரணையில் மாணவிகளை மிரட்டி எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சிக்கியிருக்கின்றன. இந்த வீடியோக்களைப் பார்த்து போலீஸாரே பதறிப்போய் இருக்கிறார்கள்.

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வரும் ரிஷ்வந்த், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் நண்பராகப் பழகி வந்துள்ளான் ரிஷ்வந்த் கடந்த வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் ரிஷ்வந்த். கடந்த 12-ம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான். வசந்தகுமார், சதீஸ், திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த ரிஷ்வந்த், மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்து விட்டு, எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். காரில் சத்தம் போட்டதால் மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே இறக்கி விட்டு,  நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

இவர்கள் தொடர்ந்து  கொடுத்துவந்த செக்ஸ் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை ரிஷ்வந்த், வசந்த், சதீஸ் ஆகிய மூவரையும் காருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் காத்திருந்தது பெரிய ஷாக்,  ஆமாம் இளம் பெண்கள், கல்யாணமான இல்லத்தரசிகள் என  200-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு அதிரடியாக கைது சேட்டு விசாரணை நடத்தினர்.  கிறுக்குப்பிடி விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கொடூர கும்பல் பள்ளி,கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்ல நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரிக்கு போகும் பணக்கார பெண்களை நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி, அவர்களை காதல் வலையில் விழ வைத்து, இவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.

 இவர்களுக்கு சொந்தமான சின்னப்பபாளையம் பண்ணை வீட்டில்தான் இந்த நாசா வேலையை  நடத்தியிருக்கின்றனர்.  காதல் வலையில் விழவைத்து பெண்களை அழைத்து செல்லும் அவர்கள், பெண்களை பாலியல் வன்முறை செய்து  அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டி இருக்கிறார்கள். இதை செய்தது வெறும் 4, 5 பேர்  கிடையாது. இந்த கும்பலில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்களாம். இந்த கும்பல் கடந்த 7 வருடமாக இப்படி மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் 6 கோடிக்கும் மேல் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.

பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்தும்  அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெற்று உள்ளனர். பணம் இல்லாத பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இப்படி பாதிக்கப்பட்டது ஒன்னு ரெண்டு இல்ல   200க்கும் அதிகமான பெண்கள் இப்படி பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் இவர்கள் பின்னணியில் அரசியல் புள்ளிகள் பலர் இருப்பது தெரிய வந்துள்ளது. அரசியல் புள்ளிகளுடன் தொடர்புடைய இந்த காமக்கொடூர இளைஞர்கள் பெண்களை மிரட்டி அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையையும் செய்து வந்துள்ளனர். கோவையை சேர்ந்த சில முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுவரை சைலண்ட்டாகவே சென்று கொண்டிருந்த இந்த பிரச்சனை  மீண்டும் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. இவர்களிடம் இருந்து போலீசார் இதுவரை சுமார் 1500 வீடியோக்களை கைப்பற்றி இருக்கிறார்கள்.  வீடியோவில் இருப்பது  எல்லோரும் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் கண்ணீருடன் கதறும் வீடியோக்கள்  இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

"

இந்த வீடியோக்கள் சினிமா நடிகர்கள், சமூக போராளிகளிடம் தற்போது சென்று சேர்ந்துள்ளது. இந்த வீடியோக்கள் மிகவும் பதற வைக்கும் அளவிற்கு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.  தற்போது இந்த பிரச்சனையை அவர்களும் கையில் எடுத்துள்ளதால், சமூகவலைத்தளங்களில் அதிகமாக எதிர்ப்பு வலுத்துள்ளது.