பொள்ளாச்சி பாலியல் விவகார விவகாரத்தில் சம்பந்தமிருப்பதாக கூறப்பட்ட பார் நாகராஜன் இப்போது அடிதடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணிய வைத்த விவகாரம் சூறாவழியாய் சுழன்றது. 

இந்தப் புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் புகார் கொடுத்ததாக பெண்ணின் அண்ணனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகர் பார் நாகராஜனின் பெயர் புகாருக்கு உள்ளானது. அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார் நாகராஜன் ஒரு பெண்ணை மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்றும் வெளியானது. 

தனக்கு தெரிந்தவர் மீதான புகாரை வாபஸ் வாங்கவேண்டும் என பார் நாகராஜன் மிரட்டுவது போன்றும் அதற்கு அந்தப் பெண் மறுத்த போது கணவரையும் குடும்பத்தையும் தூக்கிவிடுவேன் என பார் நாகராஜன் கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஆடியோ வெளியாகியது. இதனிடையே பொள்ளாச்சி, ஜோதி நகரில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பார் நாகராஜன் உள்பட 14 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.