திருச்சி ஜங்ஷன் ராயல் ரோடு பகுதியில் பிரபல நச்த்திர ஹோட்டல்  ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் தமிழரசன் என்பவர் மேனேஜராக உள்ளார். ந்று முன்தினம்  இரவு 10.30 மணிக்கு ஒரு இளைஞர் , இளம் பெண் ஒரவருடன் அங்கு வந்தார்.

தங்கள் இருவரையும் கணவன், மனைவி என்று மேலாளரிடம் கூறினார். அவருக்கு மேலாளர் தங்க அறை கொடுத்தார். இந்நிலையில் அந்த இளைஞரின்  நடவடிக்கையில் ஓட்டல் மேலாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண் அணிந்திருந்த உடையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கண்டோன் மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அந்த வாலிபர் மற்றும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை உல்லாசத்திற்காக ஓட்டலுக்கு அழைத்து வந்ததும் மேலாளரை ஏமாற்றி அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அநத் இளைஞர்  சென்னை மண்ணயடியை சேர்ந்த நஜீம் என்பதும் பிரபல  அரசியல் கட்சி பிரமுகரான இவர் மீது பல வழக்குகளும் நிலுவையில்  இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு திருச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்..

ஓட்டலுக்கு வரும் சந்தேக நபர்கள் குறித்து தகவல் கொடுக்க வேண்டும் என  போலீசார் அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடத்துள்ளது. அதன் அடிப்படையில் மேலாளர் கொடுத்த புகாரின் பெண்ணுடன் தங்கிய அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.