திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ராமச்சந்திராப் பட்டிணத்தை சேர்ந்தவர் திருநங்கை பபிதா ரோஸ், ரோஸ் டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஆதரவாக பல்வேறுப் போராட்டங்களையும், சேவைகளையும் செய்து வந்துள்ளார். 

கடந்த வருஷம் டிசம்பர் மாதத்தில் திருநங்கைகளுக்கு எதிராக, திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.  எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்ச்சை பேச்சால் திருநங்கை பபிதா ரோஸின் வீட்டில் யாரோ மர்மநபர்கள் கல்வீசி தாக்குவதாக போலீசில் புகார் கொடுத்ததால்,  அங்கு எஸ்.ஐயாக இருந்தவர் விஜய சண்முகநாதன், இந்த புகார் சம்பந்தமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதால், நாளடைவில்  இப்பழக்கம் இருவருக்கிடையே திருமணம் வரை நீடித்தது. மனைவி குழந்தைகள் இருப்பதை மறைத்தே திருநங்கை பபிதா ரோஸை இரண்டாவதாக யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார் எஸ்.ஐ விஜய சண்முகநாதன். 

கடந்த 2 வருடத்திற்கு மேலாக யாருக்கும் தெரியாமல் இருந்தது, இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவர்களது திருமண உறவு எஸ்.ஐ.குடும்பத்தாருக்கு தெரியவர கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கை பபிதாவை பார்க்க செல்லாமல் இருந்துள்ளார் விஜய சண்முகநாதன்.  போன் போட்டாலும் அவர்  எடுப்பதில்லையாம், இதனால் ஆத்திரப்பட்ட திருநங்கை பபிதா ரோஸ் தற்பொழுது எஸ்.பியை சந்தித்து புகாரளித்துள்ளதாக சொல்கிறார்கள்.

அந்த புகாரில், மனைவி இருப்பதை மறைத்து, திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த அம்பாசமுத்திரம் காவல்நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன். இப்பொழுது ஏனோ என்னை பார்க்க வராமல் தவிர்த்து வருகிறார். அவர் என்னுடன் இருந்த காலங்களில் அவரிடம் நகை பணம் உள்ளிட்டவைகளை இழந்துள்ளேன். அவரை மட்டுமல்ல, அந்த நகை பணம் அனைத்தையும் மீட்டுத் தர வேண்டுகிறேன் என மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்க, தற்பொழுது தாழையூத்து டி.எஸ்.பி.பொன்னரசு விசாரணை செய்து வருகின்றார்.