தப்ப முயன்ற பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு
ஸ்ரீபெரும்புதூர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முயற்சித்தபோது, அவர்கள் தப்ப முயன்றதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்தில் இருவர் கூட்டுப்பலாத்காரம் செய்தனர். தனியார் நிறுவன ஊழியரான அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இளம்பெண் அளித்த புகாரையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். 20 நாட்களாக வலைவீசி தேடிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த நாகராஜ், பிரகாஷ் என்ற 2 பாலியல் குற்றவாளிகளையும் செம்பரம்பாக்கம் பகுதியில் போலீஸார் சுற்றிவளைத்தனர்.
போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றபோது இருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸார் கைது செய்தனர். காலில் காயமடைந்த இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காதலியை ஆசை தீர அனுபவித்துவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.