கனடாவில் நடந்த இலங்கைப் பெண் தர்ஷிகா கொலை வழக்கில் பல திடீர் திர்ப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளது, தீவிரமான போலீஸ் விராசணை நடைபெற்று வந்த நிலையில் அவரது கணவரே தன்ஷிகாவை கொலை செய்திருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த்துள்ளது.

   

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தர்ஷிகா,  இலங்கையில் அரசு வேலை நல்ல சம்பளம் என்று இருந்தவர் கனடாவைச் சேர்ந்த சசிதரன் என்பவருடன் பேஸ்புக் மூலம்  ஏற்பட்ட காதலால்,  இலங்கையில்  தான் செய்துவந்த அரசு பணி, பாசமாக இருந்துவந்த  உறவினர்கள் என அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு சசிதரனுக்காக கனடா சென்று அவரை திருமணம் செய்து கொண்டார்.ஆரம்பத்தில் தர்ஷிகா சசிதரன் திருமணம் வாழ்க்கை மற்ற தம்பதிகளைப்போல  மகிழ்ச்சியாகவே இருந்தது,  இந்நிலையில் திடீரென தர்ஷிகா  மர்மமான முறையில் உயிரிழ்ந்தார். அவரின் மரண செய்தி தர்ஷிகாவின் குடும்பத்தையே  நிர்மூலமாக்கி விட்டது. தன் மக்களுக்கு கனடாவில் என்ன நடந்த து என்பது தெரியாமலேயே பொற்ற மகளை பறிகொடுத்துவிட்டு வேதனையில் பெற்றோர்கள் உருகினர்.

அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது  என்பது குறித்து கனடா போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். அதில் பல திடிக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தது  தர்ஷிகாவின் மர்ம மரணம் கொலை என்று சொல்லுக் அளவிற்கு வழக்கில்  திடீர் திருப்பம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமான கையோடு சசிதரன் உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த தன்ஷிகாவுக்கும்  சசிதரனுக்கு மிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் மீண்டும் இணையமுடியாத அளவிற்கு விரிசல் ஆக மாறியுள்ளது,   இந்நிலையில் சசிதரனுக்கும் தர்சிகாவுக்கும் இடையே பல நேரங்கள் வாக்குவாதங்கள் ஏற்பட்டு  கைகலப்புகளும் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் சசிதரனின் கொடுமை தாங்கமுடியாத தர்ஷிகா , சசிதரன் தன்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்வதாக கூறி தான் உயிரிழப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்பாகவே  அங்குள்ள நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் தர்ஷிகா முறையான ஆதாரங்களை சமர்பிக்காததால் அவரின் வழக்கை அப்போது நீதிமன்றம் ரத்து செய்து விட்டது, இந் நிலையில். 

தர்ஷிகா  மரணம் தொடர்பாக கனடா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பலன் திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது.  ஏற்கனவே தர்ஷிகா சசிதரன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு ஏற்ப அவரது பெட்டி மற்றும் காருக்குள் ஆணுறைகள் ஆபாச படங்கள் இருந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர் இந்நிலையில் சசிதரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த காரணத்தினால் அவர் தர்ஷிகா விட்டு விலக வேண்டுமென்பதால் தன்ஷிகாவை அடித்து துன்புறுத்தி இருக்கலாம் என்றும், அதற்கு தர்ஷிகா ஒத்துழைக்காத காரணங்களால் அவரை சசிதரன் அடித்துக்கொலை செய்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது இந்நிலையில் ஏற்கனவே தர்ஷிகா சசிதரன் தொடர்பாக நீதிமன்றத்தில்  தொடுத்த வழக்கை மீண்டும் நீதிமன்றம் மீண்டும் தூசு தட்டி  விசாரணைக்கு எடுத்திருக்கிறது இந்த வழக்கில் நிச்சயம் தர்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது