Asianet News TamilAsianet News Tamil

நடு கடலில் வீசப்பட்ட உடல்... இரவு பகலா தேடும் போலீசார்... தலைமறைவான பெண் வக்கீல்!! அதிரவைக்கும் அடையாறு சம்பவம்...

காதலியை பெருத்து வைக்க கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் கூலிப்படையை ஏவி, கோடீஸ்வரரை கடத்திச் சென்று கொலை செய்து அதை மறைக்க நடு கடலில் வீசப்பட்ட  வழக்கில் உடலை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். ஆழ்கடல் பகுதியில் சடலம் வீசப்பட்டதாக கருதுவதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை எப்படி நிரூபிக்க முடியுமா?  என கேள்வியெழுப்புகின்றனர்.

Police search dead body at sea
Author
Chennai, First Published Jul 27, 2019, 3:59 PM IST

காதலியை பெருத்து வைக்க கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் கூலிப்படையை ஏவி, கோடீஸ்வரரை கடத்திச் சென்று கொலை செய்து அதை மறைக்க நடு கடலில் வீசப்பட்ட  வழக்கில் உடலை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். ஆழ்கடல் பகுதியில் சடலம் வீசப்பட்டதாக கருதுவதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை எப்படி நிரூபிக்க முடியுமா?  என கேள்வியெழுப்புகின்றனர்.

சென்னை அடையாறு, இந்திரா நகர் முதல் அவென்யூவை சேர்ந்த சுரேஷ் பரத்வாஜ் திருமணம் ஆகாமல் சித்திகளுடன் வசித்து வந்துள்ளார்.  கடந்த ஜூன் 21ம் தேதி சுரேஷ் திடீரென மாயமானார். அவரது சித்தி புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த அடையாறு போலீசார் சுரேஷ் பரத்வாஜை தேடி வந்தனர். மாயமான அன்று சுரேஷ் செல்போனை வீட்டு கார் டிரைவரிடம் கொடுத்து சென்றுள்ளார்.  அந்த டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் அடையாறில் உள்ள வக்கீல் பிரீத்தி வீட்டுக்கு சென்றதாக சொல்லியுள்ளார்.பிரீத்தியிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். அவரது வீட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அங்கு சுமார் 1 மணி நேரம் இருந்துவிட்டு ஆட்டோவில் எரிச் சென்றது தெரியவந்தது. 

ஆட்டோ எண்ணை வைத்து  டிரைவரிடம் விசாரித்தனர். இதற்கிடையே போலீசார் ப்ரீத்தியின் செல்போனை ஆய்வு செய்தபோது காசிமேட்டை சேர்ந்த குடும்பி பிரகாஷ் என்பவருடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. எனவே அவரை போலீசார் நேற்று மடக்கி  விசாரித்ததில் சுரேஷ் வீட்டில் வேலை செய்த சித்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரை அடைய கொஞ்சம் கொஞ்சமாக  4 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். ஒரு நாள் வேலைக்கார பெண்ணிடம் சுரேஷ்  உல்லாசமாக இருக்க முயன்றதால் அவர் வேலைக்கு வராமல் நின்றுள்ளார். சுரேஷ் தான் கொடுத்த கடனை சித்ராவிடம் திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்ததால் வக்கீல் ப்ரீத்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு ப்ரீத்தி வேலைக்காரி சித்ராவை அவருடன் சேர்த்து வைப்பதாக சொல்லி ₹65 லட்சம் வாங்கியிருக்கிறார். ஆனால் வேலைக்காரி சித்ராவை வக்கீல் ப்ரீத்தி சேர்த்து வைக்காததால் அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். 

இதனால் பிரீத்தி கடந்த ஜூன் 21ம் தேதி அவரை சுரேஷை பிரகாஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டி சுரேஷிடம் சித்ராவை சம்மதிக்க வைத்துள்ளதாகவும் செல்போனை வைத்துவிட்டு தனியாக வரவழைத்து காசிமேட்டில் பிரகாஷ் மற்றும் 5 பேரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் 7 பேரும் சேர்ந்து சுரேஷுடன் படகில் 8 கிமீ தூரம் கடலுக்குள் சென்றுள்ளனர். பின்னர், அவரை அடித்து கொன்று சடலத்தை கடலில் வீசிவிட்டு வந்துள்ளது தெரிகிறது. எனவே போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காசிமேடு சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான பெண் வக்கீல் ப்ரீத்தியை போலீசார் தேடி வருகின்றனர். 

இது ஒரு புறமிருக்க கடலில் வீசப்பட்ட சுரேஷின் உடலையும் போலீசார் தேடி வருகின்றனர். கழுத்தை நெரித்து கொலை செய்து ஆழ்கடலில் உடலை வீசியதாக கைது செய்யப்பட்ட அவர்கள் வாக்குமூலம் கொடுத்திருப்பதால், கடலின் நீரோட்டத்தில்  கரையின் ஏதோ ஒரு பகுதிக்கு சடலம் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் ஒதுங்கிய சடலங்களின் அடையாளத்தை ஒப்பிட்டு விசாரணை நடத்துகின்றனர். ஆந்திர கடல் பகுதியிலும் கரை ஒதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதால் ஆந்திர போலீசார் உதவியையும் அடையாறு போலீசார் நாடியுள்ளனர். அதேவேளையில் ஆழ்கடல் என்பதால் மிதந்த சடலம் மீன்களுக்கு இரையாகியிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். எனவே சடலம் கிடைக்கவில்லை என்றால் எவ்வாறு இந்த வழக்கை நடத்துவது? என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை பொறுத்த வரை, சுரேஷ் பரத்வாஜின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் பிரீத்தாவுடன் அடிக்கடி பேசியிருப்பதும், கொலை நடப்பதற்கு முதல் நாள் காசிமேடு சென்று கொலையாளிகளை சந்தித்தற்கான மொத்த ஆதாரங்களும் கொலை கும்பலுக்கு எதிராக உள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோக,  மொபைல் போன் உரையாடல்களும் எடுக்கப்பட்டிருப்பதால் சந்தர்ப்ப சாட்சிகளின் மற்றும் ஆதாரங்களின்படி இந்த கொலையை நிரூபிக்க முடியும் என்கின்றார் குற்றவியல் வழக்கறிஞர். இந்த கேஸுக்கு சம்பந்தமாக சில சுட்டிக்காட்டப்படும் நிகழ்வும் நடந்துள்ளது. அதாவது நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை கேஸில் அவரது சடலம் இதுவரை கிடைக்கவில்லை என்ற போதிலும் கொலையாளி அவரது தாய் இந்திராணி தான் என நிரூபிக்கபட்டு அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்று சடலம் கிடைக்காத எத்தனையோ வழக்குகளில் கொலை நிரூபிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை கடைசியாக சடலம் கிடைக்காத இந்த கொலை கேஸில் குற்றத்தை உறுதிபடுத்த சட்டத்தில் பல வழியிருந்தாலும், சந்தர்ப்ப சாட்சிகளுடன் ஆதாரங்களை திரட்டுவதன் மூலமே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர முடியும் என சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios