தந்தை முன்பே மகளுக்கு ஆபாசமாக சைகை செய்த போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

41 வயதான ஹரிஷ்சந்திர லஹானே என்ற காவலர் பந்த் நகர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மும்பை போலீஸ் குடியிருப்பில் தங்கி வரும் போலீஸ் உயர் அதிகாரியின் மகளிடம், பேன்ட் ஜிப்பைத் திறந்து காட்டி ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். ஹரிஷ்சந்திர லஹானே. 

இதனையடுத்து, இவர் தற்போது கைது செய்யப்பட்டார். மன உளைச்சல், மனைவி இல்லாதது, பெற்றோரும் தங்காமல் போனது, தனிமை என எல்லாம் சேர்ந்து லஹானேவை ஆபாச செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். 

இந்த தகவல் தெரிந்த அவரது சக அதிகாரிகள், அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாலியல் மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, அந்த காமத் கொடூரன் மீது துறை ரீதியிலான விசாரணைக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அந்த குடியிருப்பில் இருந்த சில அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அடித்து உதைத்து ரத்தகாயமாக்கியுள்ளனர்.