சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக வேலை பார்த்து வருபவர் மணிமேகலை. இவருக்கு வயது  24. இவர் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். இவர்  முன்பு  காட்பாடியில் பயிற்சி எஸ்.ஐ,.யாக பணியாற்றி வந்த சமயத்தில், அங்கு ஊர் காவல் படை காவலராக கூடவே வேலை பார்த்தவர் பாலசந்திரன் என்பவருக்கு மணிமேகலையை பிடித்து போகவே அடிக்கடி சந்தித்துபேசி வந்திருக்கிறார். கொஞ்ச நாளில் பாலசந்திரனுக்கு மணிமேலை மீது காதல் வைத்துள்ளார்.

தன் காதலை மணிமேகலையிடம் சொல்லாமலே இருந்துள்ளார். அப்போது வேறு ஒருவருடன் மணிமேகலைக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் பாலச்சந்திரன் மணிமேகலையை அடிக்கடி நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். இதனை எத்தனையோ முறை மணிமேகலை கண்டித்துள்ளார். ஆனால் பாலச்சந்திரனுக்கு மணிமேகலையை மறக்க முடியவில்லை.

அதனால் நேற்று டியூட்டியில் மணிமேகலை இருந்தபோதும் போன் செய்து  லவ் டார்ச்சர் செய்துள்ளார் பாலச்சந்திரன். இதனால் நேரில் வரவழைத்து வார்னிங் கொடுக்கலாம் என்று மணிமேகலை எழும்பூருக்கு பாலச்சந்திரனை வரவழைத்தார். பாலச்சந்திரனும், மணிமேகலை கூப்பிட்டதும் என்னவோ ஏதோ என்று கற்பனை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறார். அப்போது மணிமேகலை பாலச்சந்திரனிடம், தனக்கு ஏற்கனவே வேறொருவருடன் கல்யாணம் ஆனதையும், காதலில் விருப்பம் இல்லை என்றும் சொல்லி எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார். பிறகு திடீரென பாலசந்திரன் ஒரு பக்கம் மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு, மற்றொரு கையில் தாலி எடுத்து கட்ட போனார். 

இதைப்பார்த்து அலறியடித்து சத்தம் போட்டுள்ளார் மணிமேகலை , போலீசார் விரைந்து சென்று பாலசந்திரனை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து மணிமேகலை எழும்பூர் ஸ்டேஷனில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தது புழல் சிறையில் அடைத்தனர்.