காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் மாமியார் வீட்டிற்கு சென்றதும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ள ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்தவர் சந்தனகுமார் சென்னை ஆயுதப்படை போலீசில் வேலை பார்த்து வந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது திருச்செந்தூர் அருகே உள்ள நாதன் கிணறு கிராமத்தை சேர்ந்த லிங்கஜோதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு லிங்க ஜோதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில் சந்தனகுமார் கடந்த 1½ வருஷத்துக்கு முன்பு லிங்கஜோதியை காதல் கல்யாணம் செய்தார். அதன் பிறகு 2 பேரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் லிங்கஜோதி, தனது வீட்டில் அனைவரும்ன்று சேர்ந்து விட்டனர். இதனால் ஊரில் நடைபெறும் விழாவுக்கு செல்ல வேண்டும் என்று காதல் கணவர் சந்தனகுமாரை அழைத்தார்.

இதைத் தொடர்ந்து சந்தனகுமார் லீவு எடுத்து கொண்டு திருச்செந்தூர் அருகே நாதன்கிணற்றில் உள்ள தனது மனைவி லிங்கஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த போது, போலீஸ்காரர் சந்தனகுமார் திடீரென்று மயங்கி விழுந்துதாக கூறி திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அப்போது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்தனகுமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எப்படி இறந்தார், திடீர் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் போலீசார் சந்தனகுமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சந்தனகுமார் இறந்தது பற்றி அவரது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த சந்தனகுமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சந்தனகுமார் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.