நள்ளிரவில் நின்றுகொண்டிருந்த திருநங்கை வராததால், அடித்து துணியை கிழித்து போலீசார் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியானதால், நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.  சனா என்ற பெயருள்ள திருநங்கை ஓமலூர் மெயின் ரோட்டில் நின்றுகொண்டிருப்பதும், அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட சிலர் லத்தியால் சராமரியாக அடிப்பது போலவும் காட்சிகள் தாங்கிய வீடியோ ஒன்றை முன்னணி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அங்கு நடந்தைப் பற்றி கூறிய திருநங்கை சனா, நான் இந்த பகுதியில் விபச்சாரம் செய்து வந்தேன். கடந்த மாதம், என்னை ஒரு திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர். சில நாட்களுக்குப் பின், நான் ஜாமீனில் வந்துவிட்டேன். இந்நிலையில்தான், இன்ஸ்பெக்டர் சக்திவேல்  காசே கொடுக்காமல் அழைத்து அடிக்கடி  துன்புறுத்துகிறார்.

தினமும் நள்ளிரவில் வந்து ,  எவ்வளவு என ரேட் என கேட்பார். நான் ரேட் சொன்னதும், ரேட் அதிகமாக இருப்பதாக சொல்லி  அடிக்க ஆரம்பிப்பார், மேலாடையை கிழித்து அடிப்பார். யாரேனும், பொதுமக்கள் இதனை கேள்வி கேட்டால், அவர் அங்கிருந்து சென்றுவிடுவார். என்னை கைது செய்ய வேண்டும் எனில், போலீஸ் வாகனத்தில்தானே ஏற்ற வேண்டும்? ஆனால் அவர் ஆட்டோவில் அழைத்து செல்வது ஏன்? என புரிந்துகொண்டேன் என்று கூறியுள்ளார். 

இந்த சோகத்திற்குப் பின், இன்ஸ்பெக்டர் சக்திவேலின் பிடியிலிருந்து தப்பியோடிய திருநங்கை சனா,  மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பிரச்னை தெரியவந்ததும் சேலம் கமிஷனர் சங்கர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.