Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைனில் வெடி மருத்து வாங்கிய நபர் கைது.! தனது எதிரியை கொலை செய்ய திட்டம்.?போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கோவையில் தனது எதிரியை கொலை செய்ய ஆன்லைனில் வெடி மருத்து வாங்கிய மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 

Police have arrested a person who bought explosives online
Author
First Published Nov 24, 2022, 10:49 AM IST

ஆன்லைனில் வெடிபொருள்

கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குண்டு வெடிப்பிற்கு தேவையான வேதி பொருட்கள் ஆன்லைனில் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  ஆன்லைனில் வெடி மருந்துக்கு பயன்படும் வேதி பொருட்கள் வாங்குபவர்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, கோவில்பட்டியை சேர்ந்த இளைஞரும் கோவையைச் சேர்ந்த இளைஞரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்தில் சிக்கினர். கடந்த மே மாதம் கோவை குரும்பபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் flipkart-ல் பொட்டாசியம் நைட்ரேட் 100 கிராம் மற்றும் சல்பர் 100 கிராம் ஆகியவற்றை ஆர்டர் செய்து அதே மாதம் 20ம் தேதி வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

பாஜக பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..! அண்ணாமலை, சூர்யா சிவா மீது போலீசில் புகார்..! கைது செய்ய வாய்ப்பா..?

Police have arrested a person who bought explosives online

என்ஐஏ போலீசார் இருவரிடம் விசாரணை

இதனையடுத்து கோவையை சேர்ந்த செந்தில்குமாரை  தேசிய புலனாய்வு முகமை போலீசார் இந்த மாதம் 19 ஆம் தேதி செந்தில்குமாரை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு நேரடியாக அழைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் செந்தில்குமார், தான் பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள தண்ணீர் பந்தல் அருகில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் பழைய வியாபாரம் செய்து வருவதாகவும் எனது கடையில் பணிபுரியும் மாரியப்பன் என்பவர் தான் எனது செல்போன் மூலம் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.தான் எந்த பொருட்களை  வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழக உரிமையை பறிக்கும் ஆளுநரை புகழுறீங்களே.. உங்களை என்ன சொல்வது.. எடப்பாடியாரை விளாசும் கனிமொழி.!

Police have arrested a person who bought explosives online

கொலை செய்ய திட்டம்- குற்றவாளி கைது

இதனையடுத்து கோவில்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் மாரியப்பன் மீது கொலை முயற்சி கஞ்சா வழக்குகள் இருப்பது தெரியவந்தது.மேலும் தனது எதிரியான மகாராஜன் என்பவரை குண்டெறிந்து கொள்ள முயற்சி செய்வதற்காக இந்த வெடிபொருட்கள் வாங்கியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்த மாரியப்பனை சரவணம்பட்டி போலீசார் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  மாரியப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

பாஜகவினர் தான் தமிழகத்தில் போதைப்பொருளை விற்பனை செய்கிறார்கள்..? கடும் குற்றச்சாட்டு கூறிய ஆர் எஸ் பாரதி

Follow Us:
Download App:
  • android
  • ios