ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

ஹோலி பண்டிகையால் ஏற்பட்ட முன்விரோதம்

டெல்லியின் தாப்ரி பகுதியில் உள்ள கிருஷ்ணாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் இடையே ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த வாரம் கிருஷ்ணாவை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிருஷ்ணா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


பெல்டால் தாக்கி கொலை செய்த சிறார்கள்

இந்தநிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. அந்த வீடியோவில் கிருஷ்ணாவை, சூரஜ் உள்ளிட்ட கும்பல் பெல்ட் மற்றும் கட்டையால் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட கிருஷ்ணா வலியால் அலறி துடிக்கிறார். இருந்த போதும் அந்த கும்பல் கிருஷ்ணாவை காட்டு மிராண்டி தனமாக தாக்குகின்றனர். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், கிருஷ்ணாவை தாக்கி கொலை செய்த வழக்கில் 4 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.