மதுரையில் குற்றவாளியை சுட்டு பிடித்த காவல் துறையினர்

மதுரையில் காவல் துறையினரை அரிவாளால் தாக்க முற்பட்ட ரெடியை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police gun shot against criminal in madurai

மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ம் தேதி உலகனேரியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை, மதுரை மாட்டுத்தாவணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக, வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடியான உலகனேரியைச் சேர்ந்த  வினோத் என்பவர் கைது செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். 

துண்டு பிரசுரம் விநியோகித்த பெண்களின் ஆடையை பிடித்து இழுத்த பாஜகவினரால் பரபரப்பு

மதுரை வண்டியூர் பகுதிக்கு வினோத்தை காவல்துறையினர் அழைத்துச் சென்று அடையாளம் காட்டியபோது, திடீரென அங்கு பதுக்கி வைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ராஜாங்கம் ரௌடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தார். இதனையடுத்து, காயமடைந்த ரௌடி வினோத் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios