அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணும் நட்புபாக பேசி பழகி வந்துள்ளார்.

ஈரோட்டில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் போலீஸை ஏட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

 ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் போலீஸ் ஏட்டு செல்வன் (32). இவர் சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டின் ஜீப் டிவைராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரயில்வே போலீஸில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செல்வனுக்கும் அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணும் நட்புபாக பேசி பழகி வந்துள்ளார்.

அந்த பெண் போலீஸ் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று பெண் போலீஸ் வீட்டிற்கு செல்வன் சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை செல்வன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் இருந்து தப்பித்து வெளியில் வந்து அலறி கூச்சலிட்டுள்ளார். 

பின்னர், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விசாரித்துள்ளனர். அப்போது, விவரத்தை கூறி பெண் போலீஸ் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி காவல்நிலையத்தில் பெண் போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணை செல்வன் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. 

இதனையடுத்து செல்வன் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.