Asianet News TamilAsianet News Tamil

ஆன்மீக சுற்றுலா கூட்டிபோறதா சொல்லி பணத்தை சுருட்டிய நபர்... மும்பை சென்று தூக்கிய போலீஸ்!!

ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி செய்த நபரை மும்பை சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

police arrested man from mumbai who cheated money by saying that take people to spiritual tourism
Author
Theni, First Published Aug 3, 2022, 5:28 PM IST

ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி செய்த நபரை மும்பை சென்று காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி  பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாரிஜாதம் 57 வயதான இவர் வெளிமாநிலங்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வட மாநிலங்களில் உள்ள ஆன்மீக இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என்று தனக்கு தெரிந்த நபரின் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது செல்போனில் பேசிய நபர், ஷேத்ராம் டூர்ஸ் என்ற பெயரில் சென்னையில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருவதாகவும், கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு ரயில் மூலமாக ஆன்மீக சுற்றுலா அழைத்துச் சென்று வருவதாக அறிமுகம் செய்துள்ளார். 72 நபர்கள் கொண்ட ஒரு ரயில் பெட்டியில் இந்த சுற்றுலா அழைத்துச் செல்ல முடியும் எனவும், இதற்கு முன் பணமாக தலா ஒருவருக்கு ரூ.3000  கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: உன் லவ் உண்மைனா.. இதை நீ செய்யணும்.. மாணவிக்கு காதலன் வைத்த கொடூரமான டெஸ்ட்..!

police arrested man from mumbai who cheated money by saying that take people to spiritual tourism

அதற்கு பதிலளித்த பாரிஜாதம், தன்னிடம் 109 நபர்கள் இருப்பதாக கூறவே, அப்படி என்றால் இரண்டு ரயில் பெட்டிகளை முன் பதிவு செய்ய வேண்டும் கட்டணத்தை உடனடியாக செலுத்துங்கள் என ஒரு வங்கிக் கணக்கை கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது 90 நபர்களிடம் தான் பணம் வசூலானது என 4,00,800 ரூபாயை அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணைகளாக பாரிஜாதம் செலுத்தியுள்ளார். அதற்கு மீதமுள்ள நபர்களின் பணத்தையும் செலுத்தினால் தான் முன் பதிவு செய்ய முடியும், எனவே உடனடியாக பணத்தை கட்டுங்கள் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர் பாரிஜாதத்தின் அலைபேசி அழைப்பை 10 நாட்களுக்கு மேலாக அந்த நபர் ஏற்காமல் இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உனர்ந்த பாரிஜாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், பாரிஜாதத்தை தொடர்பு கொண்ட அலைபேசி எண் மற்றும் பணம் செலுத்திய வங்கி கணக்கின் விவரங்களை கொண்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் செயல்பட்டு வந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த ஹேமமாலினி என்ற பெண்ணை கைது செய்தனர்‌.

இதையும் படிங்க: "அண்ணா என்ன விட்ருங்க; கெஞ்சிக் கதறியும் விடாமல் பெண்ணை வீடு புகுந்து தூக்கிச் சென்ற 15 பேர; பகீர் வீடியோ.!

police arrested man from mumbai who cheated money by saying that take people to spiritual tourism

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையை சேர்ந்த நபர் ஒருவர்தான் இந்த வேலையை செய்யச் சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து மும்பை விரைந்த தனிப்படை சைபர் க்ரைம் போலீசார், கான்சூர் பகுதியில் தங்கியிருந்த வெங்கட் ரமண அய்யர் என்ற 60வயது முதியவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஐ‌.சி.டபிள்யூ படித்த பட்டயக் கணக்காளர் ஆவார். தனது பெயரை வரதராஜன் என்று மாற்றிக் கொண்டு ஆன்மீக சுற்றுலா உள்பட பல்வேறு இனைய தள மோசடியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது. இவர் மீது சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட மோசடி குற்ற வழக்குகள நிலுவையில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு தேனி சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு இருவரையும் அழைத்து வந்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்து ரூபாய் 4.36 லட்சம் பணத்தை கைப்பற்றினர். மேலும் இருவரிடம் இருந்தும் 10க்கு மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள்,  ஆறு செல்போன்கள் உள்ளிட்டவற்றை மீட்டனர். அதனைத் தொடர்ந்து வெங்கட் ரமண அய்யர் மற்றும் அவருக்கு உதவிய ஹேமமாலினியையும் கைது செய்து, தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடி சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios