காதலியை கொன்றுவிட்டு, வீட்டில் இருந்தவனை, 3 மணி நேரத்துக்குள் ஆகாஷ் வீட்டுக்கு இரவு 9.30 மணிக்குச் சென்றது போலீஸ், வீட்டில் பதற்றத்தில் அழுதுகொண்டிருந்தவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று விசாரிக்க ஆரம்பித்தனர் போலீஸார்.

ஆகாஷும், திலகவதியும் காதலர்கள் என்பது ஊருக்கும் பரவலாகத் தெரியுமாம், ஆனால் ஆகாஷின் நடவடிக்கை பிடிக்காமல் வெறுத்து ஒதுக்கியிருக்கிறார் திலகவதி, கடந்த  5 ஆம் தேதியில் இருந்து இருவரும் போனில் பேசி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி, கல்லூரிக்கு போய்விட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியுள்ள  திலகவதியிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆகாஷ் மாலை 5 மணியளவில் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இருவரும்  செல்போனிலேயே சண்டை போட்டுள்ளனர்.  அதன் பிறகு நேரில் வீட்டுக்குச் சென்றபோதும், இந்த வாக்குவாதம், சண்டையின் முடிவில்தான் அந்த இளம்பெண்ணை கத்தியால் வயிறு உட்பட மூன்று இடங்களில் குத்திவிட்டு ஓடிவிட்டார் ஆகாஷ்.

ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய திலகவதி, செல் போனிலிருந்து தனது மாமாவைத் தொடர்புகொண்டு, தான் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பதாக கதறிக்கொண்டு காப்பாற்ற உதவிகேட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் சந்தேகப்பட்டு வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது திலகவதி ரத்தவெள்ளத்தில் கடந்த திலகவாதியை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கருவேப்பங்குறிச்சி போலீஸாருடன் ஸ்பாட்டுக்கு சென்ற விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, திலகவதியின் செல்போன், நோட் புத்தகங்களை ஆராய்ந்துள்ளார்கள். சில நோட்டு புத்தகங்களில் ஆகாஷ் என்றும், நோட்டுப் புத்தகங்களில் ஹார்ட்டின் படம் போட்டு அதில் AT என்று அதாவது (ஆகாஷ்-திலகவதி) என எழுதி வைத்திருந்ததை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, திலகவதியின் தோழியிடம் போலீஸ் விசாரித்த போது தான், திலகவதிக்கு ஆகாஷ் என்பவனுடன் காதல் இருந்துள்ளதும், அவன் பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்திருக்கிறது. கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் ஆகாஷ் வீட்டுக்கு இரவு 9.30 மணிக்குச் சென்றது போலீஸ், வீட்டில் பதற்றத்தில் அழுதுகொண்டிருந்தவனை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று விசாரிக்க ஆரம்பித்தனர் போலீஸார்.