கம்முன்னு யாருக்கும் தெரியாம கஞ்சா விற்று வந்த முக்கிய புள்ளி..! அலேக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ் ..! 

சென்னை மீன்பிடி துறைமுகம் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த அறுப்புராஜ் அவரிடம் இருந்து கால் கிலோ கஞ்சா கைப்பற்றினர். 

மேலும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா மொத்த விற்பனையில் ஈடுபட்டு வந்த குணசேகர் என்பவரிடம் வாங்கியதாக தெரியவர அதை தொடர்ந்து சென்னை மீன்பிடி துறைமுகம் காவல் துறை ஆய்வாளர் கவிதா தனிப்படை அமைத்து பிடிப்பட்ட அறுப்பு ராஜ் என்பவரை வைத்து கைபேசியில் குணசேகரனை தொடர்பு கொண்டு அவசரமாக கஞ்சா வேண்டும் என்று கூறி தேசிய நகருக்கு வரவைத்து அங்கு மறைந்து இருந்த போலீசார் குணசேகரனை சுற்றி வளைத்து பிடித்தனர். 

குணசேகரனிடம் விசாரணை மேற் கொண்டதில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திராவில் இருந்து கஞ்சா மொத்தமாக வாங்கி காசிமேடு, மற்றும் புது வண்ணாரப்பேட்டை, மீனபிடித் துறைமுகம் ஆகிய இடங்களில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவர அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது காசிமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.