Asianet News TamilAsianet News Tamil

பசங்கள லவ் பண்ண சொல்றான்... கொல பண்ணா கண்டுக்க மாட்டான்... வீடியோ வெளியிட்ட பாமகவை சேர்ந்த சினிமா இயக்குனர்!!

நீ தைரியமா லவ் பண்றா, நாங்க இருக்கோம் என்று மேடை போட்டு பேசுகிறார்கள், அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் ஒருத்தனும் குரல் கொடுக்க மாட்டான் என ஆவேச வீடியோ வெளியிட்டுள்ளார் பாமக ஆதரவாளரும் இயக்குனருமான மோகன்.

PMK Supporter released video viruthachalam girl murder
Author
Chennai, First Published May 12, 2019, 3:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நீ தைரியமா லவ் பண்றா, நாங்க இருக்கோம் என்று மேடை போட்டு பேசுகிறார்கள், அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் ஒருத்தனும் குரல் கொடுக்க மாட்டான் என ஆவேச வீடியோ வெளியிட்டுள்ளார் பாமக ஆதரவாளரும் இயக்குனருமான மோகன்.

திலகவதி என்ற கல்லூரி மாணவி ஆகாஷ் என்ற இளைஞன் அவரை வீட்டிற்குச் சென்று கத்தியால் குத்தி கொலை கொலை செய்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம்  பாமக ஆதரவாளரும் சினிமா இயக்குனருமான மோகன் தனது ஃமுகநூலில்  வெளியிட்டுள்ள வீடியோவைர். 

அதில் அவர் பேசியுள்ளது... கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் திலகவதி என்கிற இரண்டாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு ஒருவன் தைரியமாக எஸ்கேப்பாகிருக்கான். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்தும் போய்விட்டாள். இந்த சம்பவம் நடந்து முழுதாக ஒரு நாள் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று உங்களில் யாருக்குத் தெரியும்? உண்மையில் இந்த சம்பவத்தை பற்றித் தெரிந்தவர்கள் எத்தனை பேர் தங்களுடைய சமூக வலைதளத்தில் கண்டனமோ, வருத்தமோ தெரிவித்தீர்கள்? 

PMK Supporter released video viruthachalam girl murder

அந்தப் பெண்ணின் குடும்பம் ஒரு விவசாய குடும்பம், அவள்தான் அந்த குடும்பத்தில் முதல் பட்டதாரி. முதல் முறையாக கல்லூரிக்கு படிக்கச் செல்லும் பெண்ணிடம் என்னை நீ லவ் பண்ணல  என சொல்லி கத்தியை எடுத்துக் குத்துகிறான். ஆனால்  இதை பார்த்தும் பார்க்காததுபோல், கேட்டும் கேட்காததுபோல் இருக்கும் இந்த போராளிகளை சமூகத்தில் கொண்டாடுகிறீர்கள். ஒரு எதிர்ப்புக் குரல் கொடுத்தால்தானே இவ்வாறான புத்தி உள்ள பசங்களுக்கு பயம் வரும்? என்ன சொல்வதென்றே  தெரியவில்லை. நினைத்துப் பாருங்கள். எத்தனை கனவுகளுடன் கிராமத்திலிருந்து சென்று படித்திருப்பாள்?

இதற்கு சினிமாக்காரர்களாகிய நாங்களும் ஒரு காரணமாக இருக்கிறோம் என்பது மறுக்கப்படாத உண்மைதான். ஏன் என்றால் பள்ளி படிக்கும்போதே காதலித்தால்தான் ஹீரோ, லவ் பண்ணால்தான் பெருமையான விஷயம் என்று சொல்லிக்கொடுத்தது நாங்க தான். லவ் இல்லை என்றால் நீ மனிதன் அல்ல, லவ் எவ்வளவு புனிதமான விஷயம் என்று திரும்பத் திரும்ப வசனங்களை பேசி பசங்க மனதைக் கெடுத்தது சினிமாதான். ஆனா அதைத் தாண்டி அரசியலும் இதை நிறைய செய்திருக்கிறது. 18 வயசு பெண்ண நீ தைரியமா லவ் பண்றா, நாங்க இருக்கோம் என்று ஒரு பிரச்சாரமாகவே மேடை போட்டு பேசுகிறார்கள். இந்த மாதிரி  பசங்களை கெடுத்த கும்பல் நிறையவே இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் ஒருத்தனும், குரல் கொடுக்க மாட்டான். அப்படி சொல்லிக்கொடுத்து தைரியம் கொடுக்கிறார்கள். அந்த தைரியத்தால் தானே அவன் வீடு புகுந்து கொலை செய்யும் அளவிற்கு உருவாக்கியுள்ளது என ஆவேசமாக கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios