எனக்கு வயசு ஆச்சுன்னு! கழட்டி விட்டுட்டு வாலிபருடன் உல்லாசமாக இருந்ததால் கொன்றேன்!பாமக நிர்வாகி கொலையில் பகீர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள். இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பாமக மகளிரணி நிர்வாகி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள். இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மாரியம்மாள் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் மகள் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மாரியம்மாளை முத்துகாலாடி(57) மற்றும் அவரது நண்பர் சுப்பையா பாண்டியன்(58) என்பவரோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- எனக்கும், மாரியம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. ஆனால், திடீரென என்னுடனான கள்ள உறவைத் துண்டித்துவிட்டு மாரியம்மாள் இன்னொரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.