ஆசை வார்த்தை பேசி காதலியை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சையை அடுத்த ராமாபுரம் அருகே உள்ள தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் தேவிகா (பெயர் மாற்றம்). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலக வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நீலகண்டன் தஞ்சை அருகே உள்ள வயலூரில் உள்ள குடிநீர் சப்ளை சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நீலகண்டனுக்கு தேவி அறிமுகம் கிடைத்துள்ளது முதலில் நட்பாக பழகிய இவர்கள் பிறகு காதலிக்க தொடங்கியுள்ளனர். நாட்கள் ஆக ஆக தேவிகாவின் மைனஸ் தெரிந்துகொண்ட நீலகண்டன் தேவியிடம் கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து அவரிடம் தொடர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதனால் அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தேவிகா நீலகண்டனிடம் கூறி உள்ளார். இந்நிலையில் நீலகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த தேவிகா வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

இதனையடுத்து வல்லம் போலீசார் நீலகண்டனை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து விசாரணைக்காக மறுநாள் வருவதாக சொல்லி விட்டு சென்ற அந்த இளைஞன் நீலகண்டன் விசாரணைக்கு வராமல் தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து வல்லம் அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் நீலகண்டன் மீது கற்பழிப்பு வழக்குபதிவு செய்து தலைமறைவான நீலகண்டனை வலைவீசித் தேடி வருகின்றனர்.