Asianet News TamilAsianet News Tamil

வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

மேற்கு டெல்லியில் ரஜோரி கார்டனில் வீட்டு வேலை செய்து வந்த 48 வயது பெண் ஒருவரை அவரது முதலாளிகள் கடுமையாக தாக்கியதோடு தலை முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

physical assault for women at her work space in delhi
Author
West Delhi, First Published May 20, 2022, 4:16 PM IST

மேற்கு டெல்லியில் ரஜோரி கார்டனில் வீட்டு வேலை செய்து வந்த 48 வயது பெண் ஒருவரை அவரது முதலாளிகள் கடுமையாக தாக்கியதோடு தலை முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியை சேர்ந்தவர் 48 வயது பெண் ரஜினி. இவர் மேற்கு டெல்லியில் ரஜோரி கார்டனில் வீட்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு மாதந்தோறும் 7000 ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினி அவரது முதலாளிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுக்குறித்து அவரது சிலிகுரியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து துணை போலீஸ் கமிஷனர் கன்ஷ்யாம் பன்சால் கூறுகையில், ஒரு பெண்ணின் எம்எல்சி (மருத்துவ வழக்கு) மே 17 அன்று சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டது.

physical assault for women at her work space in delhi

எம்எல்சியின் கூற்றுப்படி, நோயாளி தனது முதலாளிகளால் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதில் அவரது முதலாளி, அபினீத் மற்றும் அவரது மனைவி தன்னைத் தாக்கியதாகவும், தலைமுடியை வெட்டியதாகவும் குற்றம் சாட்டினார். இதை அடுத்து தானாக முன்வந்து காயப்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது என்று தெரிவித்தார். இதுக்குறித்து அவரது வேலை வாய்ப்பு ஏஜென்சி கூறுகையில், கடந்த 15 ஆம் தேதி மாலை முதலாளிகளிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் அந்த தம்பதியினர் ரஜினியை என் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வெளியேறினர்.

physical assault for women at her work space in delhi

அவள் சிறுநீரில் கிடந்ததைக் கண்டேன், அவளால் அசைய முடியவில்லை. அவளுக்கு உடம்பு சரியில்லை, அவர்கள் அவளை தாக்கியிருந்தனர். நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு தம்பதிகள் அவளைத் தொடர்ந்து தாக்குவார்கள் என்று அவள் என்னிடம் சொன்னாள். கடந்த 15ம் தேதி தம்பதிகள் அவளை அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்று தலைமுடியை வெட்டியுள்ளார்கள். மேலும் அவள் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன என்று தெரிவித்தார். சஃப்தர்ஜங் மருத்துவமனையின் மருத்துவ பரிசோதனை அறிக்கையில், அந்தப் பெண் தாக்குதலுக்கு ஆளானார், தலையில் காயம் மற்றும் வாந்தி எடுத்துள்ளார். அவரது கண்கள், முகம், கைகால்கள், வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் காயங்கள் இருந்தன. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி தலைமுடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios