கோவை கணபதியில் இருக்கிறது வேதம் பால் நகர். இங்கு பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. அப்பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்கள் இங்கு தொழுகை நடத்தி வருகின்றனர். பள்ளிவாசலில் இரவு நேர காவல் பணியில் இரு முதியவர்கள் இருக்கின்றனர். நேற்று இரவு வழக்கம் போல அவர்கள் பள்ளிவாசலில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் ஒருவர் விழித்து கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு பெட்ரோல் வாடை வீசியுள்ளது. பள்ளிவாசல் கதவருகே திரியுடன் உடைந்த பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதில் பெட்ரோல் ஊற்றப்பட்டு நள்ளிரவில் பள்ளிவாசல் மீது வீசப்பட்டிருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தார். விரைந்து வந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். பீர் பாட்டில் ஒன்றில் பெட்ரோல் நிரப்பட்டு திரியில் தீ வைத்து வீசப்பட்டுள்ளது. ஆனால் தீ சரியாக பற்றாத காரணத்தால் பெட்ரோல் வெடிகுண்டு வெடிக்காமல் செயலிழந்துள்ளது.

இந்து முன்னணி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்..! கோவையில் பரபரப்பு..!.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இதையடுத்து காவல்துறையினர் பள்ளிவாசலில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ய முற்பட்டனர். அப்போது தான் கடந்த ஒருமாதமாக கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது. பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் வேறு சில கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

ஐ.டி நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறை..? கொரோனா பதற்றத்தில் இந்தியா..!