திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்  . மதபோதகரான இவர் அப்பகுதியில் ஜெபக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார்.  இவர் தனது  மனைவி பிரியாவுடன் அங்கு வதித்து வருகிறார்.

பாலமுருகன் நடத்தி வரும் ஜெபக்கூட்டத்துக்கு  சேருவீடு கிராமத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் வந்து செல்வார். அப்போது சரவணனுக்கும், பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.மேலும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக் காதல் குறித்து  தெரிய வரவே தனது மனைவி பிரியாவையும், சரவணனையும் பாலமுருகன் கண்டித்தார். இருப்பினும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஜெபக்கூட்டத்துக்கு சரவணனை வரக்கூடாது என பாலமுருகன் எச்சரித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஜெபகூட்டத்துக்கு சரவணன் வந்தார். அப்போது சரவணனுக்கும், பாலமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலமுருகனை சரமாரியாக வெட்டினார்.

இதில் நிலைகுலைந்து போன பாலமுருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சரவணனை கைது செய்தார்.