மொபைல் பேட்டரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பேட்டரி வெடித்ததில் 8 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

மொபைல் பேட்டரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென பேட்டரி வெடித்ததில் 8 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் செல்போனை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான நேரத்தில் பெற்றோர்களின் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது, கார்ட்டூன் பார்ப்பது என குழந்தைகள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இந்த வரிசையில் சிறுமி ஒருவர் செல்போன் பேட்டரியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அது வெடித்தது அவர் படுகாயமடைந்துள்ளார். 

முழு விவரம் பின்வருமாறு:- மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ நகர் சேர்ந்தவர் ஜோதி அவரது 8 வயது மகள் சரோஜ், மொபைல் பேட்டரி வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அது திடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்துள்ளார். அதில் சரோஜினியின் வயிறு, கை, கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயம் அடைந்த உடன் ஜெயஸ்ரீ நகர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு பெற்றோர்கள் தூக்கிச் சென்றனர், பின்னர் காயம் அதிகமாக இருப்பதால் பந்தல்கண்ட் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னர் அங்கு சரோஜா அனுமதிக்கப்பட்டார், அவரின் கைகள் வயிறு மற்றும் கால்கள் தீயில் கருகியுள்ளன, இதுதொடர்பாக சரோஜினி தாய் ஜோதி கூறுகையில், வழக்கம்போல தனது குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள், அவள் கீபேட், மொபைல் பேட்டரியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள், அப்போது அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் வந்தது, சரோஜ் அலறினாள், அதைக்கேட்டு அறைக்குள் சென்று பார்த்தபோது சரோஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், மொபைல் பேட்டரி வெடித்ததில் சரோஜின் வலதுகையில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. சரோஜினி முகம், வயிறு கை கால் முழுவதும் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் துளைத்திருந்தன.

அதிர்ஷ்டவசமாக அவளுடன் வேறு எந்த குழந்தைகளும் இல்லை, இல்லையெனில் அவர்களும் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். சரோஜின உடனே ஜெயஸ்ரீ நகர் சுகாதார மையத்திற்கு தூக்கிச் சென்றோம், அங்கிருந்த மருத்துவர்கள் சாகர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைத்தனர், தற்போது சரோஜ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர் என கண்ணீர் மல்க கூறினார். பேட்டரி வெடித்து படுகாயமடைந்துள்ளார் 8 வயது சிறுமி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.