ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! வசமாக சிக்குகிறார் பாஜக பிரமுகர்? பதற்றம்!போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

panchayat president murdered in tuticorin

தூத்துக்குடி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ். தனது தோட்டத்தில் சென்று மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் பொன்ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

panchayat president murdered in tuticorin

இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த  பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

panchayat president murdered in tuticorin

இதனிடையே, அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக், வசந்த் ஆகிய 2 பேரைப் பிடித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக், கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக பதவி வகித்து வருகிறார். ஊராட்சி மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட தகவலறிந்து, அவர் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிராம சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதையும் படிங்க;- திருட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்து எங்களை அசிங்கப்படுத்துனாங்க! மகள், மருமகனை வெட்டிக் கொன்ற தந்தை பகீர்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios