Asianet News TamilAsianet News Tamil

#StudentSuicideமாணவி மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!!

வரும்  23-ம் தேதி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கூட்டத்திற்கு மெட்டிரிக் பள்ளி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Order to file District Primary Education Officer Report on Student Suicide
Author
Chennai, First Published Nov 15, 2021, 6:31 PM IST

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின்  மரணம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தன. இதற்கிடையில், அவ்வப்போது பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடந்ததால் மாணவியும் பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த கடந்த 11ஆம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் மனைவி தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 

அதில், `யாரையும் சும்மா விடக்கூடாது,' என்று குறிப்பிட்டு சிலரது பெயர்களை மாணவி குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தை அறிந்த உக்கடம் போலீசார் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி  முன்பு படித்து வந்த தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர்  மிதுன் சக்ரவர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில்  சிறப்பு வகுப்புகள் நடக்கும்போது பள்ளியில் வைத்தே மாணவியிடம் ஆசிரியர் அத்துமீறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வந்த போராட்டத்தை அடுத்து  அப்பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு வரும்  23-ம் தேதி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கூட்டத்திற்கு மெட்டிரிக் பள்ளி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios