ஒரு பெண் இருவரை திருமணம் செய்து ஏமாற்றியதாக 18 வயது இளம் பெண் மீது அவரது முதல் கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண் சமிதா. இவருக்கு சமீபத்தில் சக்திவேல் என்பவருடன் திருமணம் நடைப்பெற்று உள்ளது. இந்த  நிலையில் இவர்களின் திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுக்கும் சமயத்தில் இருவீட்டாரிடையே சண்டை ஏற்பட்டு  பின்னர் அமைதியாக இருந்துள்ளனர்

இது குறித்து புதுமண தம்பதிக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டு தன் அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார் சமீதா. இந்த நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
பின்னர் சமீதாவை பார்த்து கேள்வி கேட்ட முதல் கணவரிடம் நடந்ததை கூறி உள்ளார். இது குறித்து சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், சமிதாவுடன் கிரிவலம் வந்தவர் பள்ளி பருவ காதலன் கார்த்திக் என்பதும் சமிதாவும் கார்த்திக்கும் தற்போது புதிதாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.