மகாராஷ்டிராவில் ஒரு காதலை ஏற்க மறுத்ததால் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளியின் வீட்டை சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் இளம்பெண் அங்கிதா (24) கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். அந்த அழகான இளம்பெண்ணை திருமணமான விக்கி நக்ரால் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆகையால், எங்கு சென்றாலும் பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அங்கிதா அவரை கடுமையாக கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவை கழற்றிவிட்டு ரஜினியுடன் கூட்டணியா..? பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!

இதனால், கோபமடைந்த விக்கி நக்ரால் பெட்ரோலுடன் வந்து அங்கிதா மீது ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்தார். இதில், படுகாயமடைந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்;- முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதாலும், உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாலும் அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்  மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டன. இளம்பெண்ணுக்கு தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.