கொடுங்கையூர் எம்ஆர்நகர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஆன்ஸ் விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீசார் எம்ஆர்நகர் பகுதியில் கண்ணன் என்பவர் கடையில் சோதனை செய்தனர் .

அந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா புகையிலை பொருட்கள்  3. மூட்டைகள் இருந்தது தெரியவந்தது இந்த மூன்று முட்டைகளையும் பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார் கடையில் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தா (48) கைது செய்தனர் புகையிலை பொருட்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்த போலிசார் ஆனந்தாவை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்...

"