சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை..! தொடரும் மரணத்திற்கு காரணம் என்ன.? போலீசார் விசாரணை
சென்னை ஐஐடியில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மூன்றாம் ஆண்டு பி.டெக் படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் மாணவர்கள் தற்கொலை
சென்னை ஐஐடியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து வருகின்றனர். ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தால் வேலை உறுதி என்ற கண்ணோட்டத்தில் ஏராளமானோர் ஐஐடியில் படிக்க போட்டி போடுகின்றனர். இருந்தாலும் ஐஐடியில் பாடங்கள் கடினமாக இருப்பதால் மாணவர்களால் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் விரக்தி அடைவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் மட்டும் இரண்டு மாணவர்கள் ஐஐடியில் அடுத்தடுத்து தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனித்து போட்டியிட்டால் பாஜக டெபாசிட் வாங்காது ..! அண்ணாமலையை சீண்டிய அதிமுக மாஜி அமைச்சர்
மேலும் ஒரு மாணவர் தற்கொலை
சென்னை ஐஐடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் நடக்கவிருப்பதால் இரவு வெகு நேரமாக படித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் புஷ்பக் தங்கி இருந்த அறையானது பூட்டியே கிடந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். இருந்த போதும் புஷ்பக் அறையில் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் கூறியுள்ளனர். அவர் சக மாணவர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கு காரணம் என்ன.?
இதனையடுத்து கோட்டூர்புரம் போலீஸாருக்கு ஐஐடி நிர்வாகம் சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் புஷ்பக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்