சென்னை ஏழுகிணறுவில் இயங்கி வந்த நகைபட்டறையில் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் கடையிலிருந்த 1 கிலோ 400 கிராம் தங்க நகைகளுடன் மாயாமாகி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஏழுகிணுறு வெங்கட் மேஸ்திரி  தெருவில்  ஏராளமான நகைபட்டறைகள் உள்ளன. இதில்  கொல்கத்தாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  நகைபட்டறையும் உள்ளது. அதே கொல்கத்தா சேர்ந்த 5 பேர் இந்த பட்டறையில் பணியாற்றி வந்தனர். தினமும் கடை ஊழியர்களுக்கு செல்போன் மூலமாக  உரிமையாளர் நகை செய்வதற்கான உத்தரவு  கூறிவந்தார். அதனடிப்படையில் வேலை ஆட்கள் நகையை செய்து  அவர் சொல்லும் விலாசத்துக்கு அனுப்பிவிடுவர்.இப்படியாக பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருந்தது, இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பணியாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது உரிமையாளர் தொடர்பு கொண்டார். ஆனால் அவருக்கு இணைப்பு கிடைக்கவில்லை. 

உடனடியாக சென்னையில் உள்ள தனது சகோதரரான ராஜிவிடம் பட்டறைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். ராஜிவ் கடைக்கு வந்து பார்த்தபோது பட்டறை மூடப்பட்டிருந்தது. மேலும் உள்ளே சென்று பட்டறையில் பார்த்தபோது அங்கிருந்த ஊழியர்கள் பட்டறையில் இருந்த 1 கிலோ 400 கிராம் தங்கத்துடன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக ஏழுகிணறு போலீசில் ராஜிவ் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் தங்கத்தை திருடி சென்ற ஊழியர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.