7 வயசு சிறுமியை கற்பழித்த செந்திலுக்கு 7 வருட  சிறை தண்டனை கிடைத்துள்ளது. 

திருப்பூர் வவிப்பாளையம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி மாலை நேரத்தில் 7 வயசு சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. இதை பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் செந்தில் என்பவர் கவனித்து கொண்டே இருந்தார். அந்த கொடூர காமுகன் செந்திலுக்கு வயசு 39. 

சிறுமியை அழைத்து சாக்லெட் தருவதாக சொல்லி, அருகில் பாதி வேலை முடிந்த நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு கூப்பிட்டார். இதனால் பயந்து போன அந்த சிறுமியோ, வீட்டுக்குள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டாள். ஆனாலும் செந்தில் விடவில்லை. வீட்டு முன்னாடி இருந்த துணிதுவைக்கும் கல் மீது உட்கார்ந்து கொண்டார். அந்த சிறுமி எப்போது வெளியே வருவாள் என வெகு நேரம் அங்கேயே உட்கார்ந்து கார்த்திருந்த அந்த காம வெறி பிடித்த மிருகம். ரொம்ப நேரம் கழித்து பயந்து பயந்து வெளியே வந்த அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிகொண்டு வீட்டின் உள்ளே சென்று துடிக்க துடிக்க கற்பழித்துள்ளான்.

இந்த விஷயம் வெளியே தெரிந்து, சிறுமி வீட்டில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசுக்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு நடந்துவந்தது. இந்நிலையில், தற்போது குற்றவாளி செந்தில் என்று உறுதி செய்யப்பட்டு செந்திலுக்கு 7 வருஷ ஜெயில், கூடவே 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. செந்தில் 10 ஆயிரம் ரூபாய் கட்ட தவறினால், இன்னொரு வருஷம் சிறைதண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.