கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை மர்ம உறுப்பை துண்டித்து வெறித்தனமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு ஊராட்சி சேதுராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சித்தார்த்தன் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு விவேக், மதன்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். சித்தார்த்தன், கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்று வந்தார். மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வருகிறார். மகன்கள் 2 பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சித்தார்த்தன் 100 நாள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவருடன் வேலை பார்க்கும் சிலர், நேற்று மதியம் சித்தார்த்தன் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கிராம மக்களிடம் தெரிவித்தனர். பின் சித்தார்த்தன் உடலை அடக்கம் செய்ய கடைசி ஏற்பாடுகளை ஊர்மக்கள் செய்து வந்தனர்.

அப்போது, சித்தார்த்தன் உடலை குளிப்பாட்டும் போது உடலில் ரத்தக்காயங்களுடன் அவரது மர்ம உறுப்பு துண்டித்து அறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அனைவரும் அடைந்தனர். இதனால், சித்தார்த்தை மர்ம நபர்கள், கொடூரமாக கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து, ஒரத்தநாடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் டி.எஸ்.பி. காமராஜ், மற்றும் போலீசார் விரைந்து வந்து சித்தார்த்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சித்தார்த்தன், மனைவி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு வேரு பெண்களுடன் தகாத உறவு இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர். இந்த தகாத விவகாரம் தெரியவந்ததால் தான் மர்ம நபர்கள் ஆத்திரத்தில் சித்தார்த்தன் மர்ம உறுப்பை துண்டித்து துடிக்க துடிக்க கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இதற்கிடையே, தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், கொலை நடந்த இடத்தில் இருந்து அருகே உள்ள சோழபுரம் கிராமம் வரை ஓடி சென்றது. யாரையும்கண்டுபிடிக்க வில்லை. ஒரத்தநாடு அருகே விவசாய தொழிலாளி மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.