வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் விதவைப் பெண்ணான முருகேஸ்வரியுடன் கடந்த ஆண்டு சிவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கல்லாக காதலாக மாறியதால் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

பின்னர், சிவாவை பிடித்துப் போனதால் அவரோடு முருகேஸ்வரி குடும்பம் நடத்திய வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சிவா இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி மிளகாய் பொடியைத் தூவி சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அவரின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது. பழனிவேல் என்பவருடன் முருகேஸ்வரிக்கு ஏற்கனவே தகாத தொடர்பு இந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனி வேலைக்காக  கடந்த  3 மாதத்திற்கு முன்பு வெளியூர் சென்றுள்ளார். பழனிவேல் வெளியூர் சென்ற நிலையில் முருகேஸ்வரிக்கும் சிவக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊர் திரும்பிய பழனி வேல்க்கு, சிவா - முருகேஸ்வரி இடையான தகாத உறவு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனிவேல், சிவா கூலிப்படையை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.