நவி மும்பையைச் சேர்ந்த பெண்  ஒருவர் அங்கிருந்து குர்லாவுக்கு ஓலா டாக்ஸியில் சென்றுள்ளார். அப்போது அந்த டிரைவர் டாக்ஸியில் சென்ற பெண்ணை சற்று வித்தியாசமாக பார்த்துள்ளார். தொடர்ந்து டாக்ஸியை ஓட்டுவதில் கவனம் செலுத்தாமல் அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த கார் சிக்னலில் கார் நின்றது. ஒரு கட்டத்தில் அந்த டிரைவர் பெண்ணைப் பார்த்துக் கொண்டே  போது கண்ணாடி வழியாக அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்டார். தனியாக பயணித்த போது அத்துமீறிய டிரைவரின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் உடனடியாக எமர்ஜென்சி பட்டனை அழுத்தியதோடு ஓலா நிறுவனத்தில் புகார் தெரிவித்தார்.

இது குறித்து அந்தப் பெண் தனது முகநூல் பக்கத்தில் தனது வேதனையை பதிவு செய்தார். இந்த பதிவைப் பார்த்த ஓலா நிறுவனம்  டிரைவரை பணிநீக்கம் செய்தனர்.

அதே நேரத்தில் பெண்ணின் பதிவை பார்த்த மும்பை போலீசார் அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு புகார் பெற்று அந்த ஓலா டிரைவரை கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 509 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே  கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று பெண் பயணியிடம் சண்டை போட்ட டிரைவர் அடித்து பிரச்சினையில் சிக்கினார். இதே போல 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார்.