Asianet News TamilAsianet News Tamil

அதிகாரியை ஜட்டியுடன் அலறவிட்ட விபச்சார அழகி !! ஹோட்டல் ரூமில் வைத்து பணம் நகை அபேஸ் ! !

கோயம்பேடு விடுதியில் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரியிடம் நகை, செல்போன், பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய விபசார அழகியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Officer lost his money with a lady
Author
Chennai, First Published Nov 29, 2019, 10:05 AM IST

சென்னை கிண்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவு கோயம்பேடு பேருந்து  நிலையத்துக்கு சென்றார்.

அங்கே அவர் ஒரு விபசார அழகியை பார்த்தார். பார்த்த உடனேயே அவருக்கு அந்த அழகியுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.  அவரிடம் ‘ரேட்’ பேசி உல்லாசமாக இருப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

Officer lost his money with a lady

அன்று இரவு முழுவதும் ஆபிஸர் ராஜ்குமாரும், அழகியும் விடிய விடிய உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் களைப்பில் ஆபிஸர் நன்றாக தூங்கிவிட்டார்.

காலை பொழுது விடிந்ததும் அந்த ஆபிஸர் கண் விழித்து பார்த்த போது, தன்னுடன் படுத்திருந்து அழகி எஸ்பேப்பாகி இருந்தது தெரிய வந்தது. அதற்குபின்தான் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த விபச்சார அழகி  ஆபிஸர் அணிந்திருந்த அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 3 தங்க மோதிரங்கள், 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம், அவர் இரவில் கழற்றி வைத்திருந்த பேண்ட், சட்டை எதுவும் அறையில் இல்லை.

Officer lost his money with a lady

அவர் நன்றாக கண் அயர்ந்து தூங்கியதைத் தொடர்ந்து அந்த அழகி, எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு அவரை உள்ளாடையுடன் ‘அம்போ’வென விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார் என்பதை உணர்ந்து சோகம் ஆனார்.

வெறும் உள்ளாடையுடன் அவரால் அறையை விட்டு கூட வெளியே வர முடியாத பரிதாப நிலை. விடுதி ஊழியரை அழைத்துப் பேசி உடைகளை வாங்கி வரச்சொல்லி அணிந்து கொண்டு, நேராக கிண்டி போலீஸ் நிலையம் சென்றார். 

Officer lost his money with a lady

அங்கே தனக்கு அறிமுகமான அதிகாரிகளை நாடி விவரம் சொல்ல, அவர்களோ சம்பவ இடம் தங்கள் எல்லையில் இல்லை என்ற நிலையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில்தான் புகார் கொடுக்க முடியும் என்றும் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். அதைத் தொடர்ந்து அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். சினிமாவில் வருவது போல் நடந்த இந்த நிகழ்ச்சி கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏஙறபடுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios