போலீசை பார்த்ததும் லட்சுமியை கூரை மேலே ஏத்தி கொண்டு போய் பதுக்கி வைச்சிட்டார் இந்த அரசு அதிகாரி. இது சம்பந்தப்பட்ட செய்திகளும் போட்டோக்களும்தான் இணையத்தில் ரவுண்டடிக்கிறது. 

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தேசிய கிராமப்புற வாய்ப்பு உறுதி திட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரியாக வேலை பார்ப்பவர் மாணிக்கியாராவ். இவர் ராத்திரி நேரம் ஆகி விட்டால், ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்தில்  பெண்களுடன் ஜாலியாக உல்லாசம் அனுபவித்து வருவதாகவும், வெளியிலிருந்து பெண்களை அழைத்துவந்து லூட்டி அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததால் சரியான நேரம் பார்த்து பிடிக்கவேண்டும் என பிளான் போட்ட போலீசார் அதிரடியாக களம் இறங்கி, கையும் களவுமாக அதிகாரியை பிடிக்க  திட்டம் போட்டனர். இதனால், முற்சரிகையாக செய்தியாளர்களுடன் சென்ற போலீசார் ஜின்னாராம் மண்டல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அலுவலகத்திற்குள் புகுந்தனர்.

அந்த சமயத்தில் மாணிக்கியாராவ் ஒரு பெண்ணுடன் செம பிஸியாக இருந்திருக்கிறார். அதாவது ராய்கோடூ மண்டலத்தில் கள உதவியாளராக வேலை பார்க்கும் லட்சுமியை தன் ஆபீசுக்கு வரவழைத்து, உல்லாசமாக இருக்க முயன்றுள்ளார்.

அப்போது, ஜன்னல் வழியாக போலீசையும், செய்தியாளர்களையும் பார்த்துவிட்ட அதிகாரிக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. அப்போது பதட்டமடைந்த அதிகாரி, கட்டில் தோழி லட்சுமியை தன் அலுவலக கட்டிடத்தின் மேல் ஏற்றி, அங்கேயே பதுக்கியும் வைத்துள்ளார். 

போலீசார் விடுவார்களா என்ன..? பில்டிங் மேலே ஏறி போய் தேடி பார்த்ததும், பதுங்கி கிடந்த கட்டில் தோழி லட்சுமியை கீழே இறக்கி அழைத்து வந்தனர். அப்போது நடந்த சம்பவம் பற்றி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவலும் அளித்தனர். அப்போது நடந்த சம்பவங்களை செய்தியாளர் வீடியோ எடுத்துக்கொண்டனர். வசமாக மாட்டிக் கொண்ட மாணிக்கியாராவ் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.