பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை.. ரவுண்ட் கட்டிய பொதுமக்கள்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
மாணவிகளை நோக்கி இளைஞர் ஒருவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
பள்ளி மாணவிகளிடம் ஆபாச சைகை காட்டி அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்து நிலையமு் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மாணவிகளை நோக்கி இளைஞர் ஒருவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளனர்.
உடனே பொதுமக்களை பார்த்ததும் அந்த இளைஞர் தப்பிக்க முயன்றார். ஆனால், அவரை விடாமல் பிடித்த பொதுமக்கள் சட்டையை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக அடி உதை கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த இளைஞர் பனப்பாக்கத்தை அடுத்த மேலபுலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (20) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர்.