நித்தியானந்தாவுக்கும் கனடா நாட்டு பெண் சிஷ்யைக்கும் நடக்கின்ற கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முகநூல் மெசஞ்சரில் நித்தி தன்னிடம் காதலை வெளிப்படுத்தி முத்தமிட்டதாகக் சொல்லி, புதிய ஆதாரத்தை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை அடுத்து நித்தியானந்தா தனது ஆதரவாளர்களை தயாராக இருக்க சொல்லி கட்டளையிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண குட்டிப்பையனாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்த நித்தியானந்தா, தற்போது ஏராளமான ஆண்- பெண் சிஷ்ய கோடிகளுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், செல்வச்செழிப்புடன் பெங்களூர் அடுத்த பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.  

முதலில் பக்தர்களிடம் தன்னை நித்யானந்த பரமஹம்சர் என்று அறிமுகப்படுத்தி அருள்வாக்கு கூறிவந்த நித்தி, மீனாட்சி வேஷம், முருகன் வேஷம், சிவன் வேஷம் என்று நடிகர்கள் போல நாளுக்கு ஒரு கெட்டப்பை மாற்றி வந்த நிலையில், சிகை அலங்கார நிபுணர் மூலம் தலையில் ஜடாமுடியை ஒட்டவைத்துக் கொண்டு தன்னையே கடவுள் பரமசிவன் என்றும், தாம் இருக்கும் இடமே கைலாசம் என்றும் யூடியூப்பில் அருளுரை நிகழ்த்தி நடத்தி அடிக்கடி காமெடி பண்ணுவார்.

இந்நிலையில், நித்தியிடம் சிஷ்யையாக இருந்து ருத்ரகன்னியாக துறவறம் ஏற்று நித்தியின் விபரீத ஆன்மீகப் பணிகளால் அதிருப்தி அடைந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா லேண்ட்ரி என்ற கனடா நாட்டு பெண், யூடியூப்பில் நித்திக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் புகார்களையும் சொல்லியுள்ளார்.

அந்தவகையில் சதாசிவம் என்ற பெயரில் தன்னுடன் முகநூல் நட்பில் இணைந்த நித்யானந்தா, தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தன்னை ஆசீர்வதிப்பதாக கூறி முத்த குறியீடுகளை பறக்கவிட்டதாகவும் சாரா லேண்ட்ரி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடா நாட்டு பெண்ணின் புகாருக்கு நித்தி, தனது பெண் சிஷ்யைகளை வைத்து சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து வருகிறார். அந்தவகையில் தனது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு, இதனை பார்த்தாலே ஆசிரமத்தில் எந்த தொல்லையும் தங்களுக்கு இல்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று மா நித்தி பக்தி பிரியானந்தா என்ற பெண் சிஷ்யை கருத்து பதிவிட்டுள்ளார்.

நித்தி மற்றும் கனடா நாட்டு பெண் ஆகிய இருவருக்கும் இடையேயான யூடியூப் கருத்து யுத்தம் புகாராக காவல் நிலையத்தை சென்றடைந்தால் இன்னும் திடுக்கிடும் பல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.