நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஜனார்த்தன சர்மா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். 

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் சாமியார் நித்யானந்தாவிடம் தனி செயலாளராக இருந்து வந்தார். என்னுடைய வேலை, நித்தியானந்தாவுக்கு நற்பெயரை உருவாக்க பெரிய விஐபிக்களை சந்திக்க வேண்டும். 2016, 17ல் பல ஊர்களுக்கு சென்று  விஐபிகளை சந்தித்து நித்தியானந்தாவை பற்றி எடுத்து கூறினேன். பின்னர், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தனது குழந்தைகளை அங்கு சேவை செய்யச் சேர்த்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 2-ம் தேதி, குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சந்திக்கச் சென்ற அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சர்மா, தனது மகளை மீட்டுத்தருமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஜனார்த்தன சர்மா " நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளுக்குப் பல கொடுமைகள் நடக்கிறது. சிறுமிகளை உடல் ரீதியாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகின்றனர். அந்த வீடியோக்கள் நித்யானந்தாவின் உதவியாக உள்ள ரஞ்சிதா, பிராணபிரியா ஆகியோரின் செல்போல் உள்ளதாக கூறியுள்ளார். 

அங்கிருந்து வெளியேற நினைப்பவர்களை வீடியோ காட்டி மிரட்டி துன்புறுத்தி வருகின்றனர். அதேபோல, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உடனே அவர்கள் மீட்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதை எதிர்த்து  நான் பெரும் பிரச்சனை செய்தேன். நான் கேள்வி கேட்பதை உணர்ந்த அவர்கள், என்னை கார்னர் செய்ய ஆரம்பித்தார்கள். தொடர்ந்து நித்யானந்தா தரப்பில் இருந்து மிரட்டல்களும் வருகின்றன. 

மேலும், என் பெண் இரண்டு மூன்று முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக சொன்னார். அந்த பலாத்காரம் மைனராக இருக்கும்போது நடந்திருக்கிறது. இதுதொடர்பாக புகார் அளித்துள்ளேன். என் மகள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருவதையடுத்து விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.