கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி தலைமுடியை வெட்டி கொண்டு நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார்.


இதே போல் அருப்புக் கோட்டையில் உள்ள மசூதி ஒன்றுக்குள் நுழைந்து அழுது புலம்பினார். இதையடுத்து அவரை வழக்கறிஞர்கள் நெல்லையில் உள்ள  தனியார் காப்பகத்தில் அனுமதித்தனர். அவருக்கு கடந்த ஒரு வாரமாக மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி, வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார்.

உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு வைத்தி வைத்தார்.