இந்த முறையும் தப்பித்தனர்…நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் 22-ம் தேதி தூக்கு தண்டனை இல்லை: டெல்லி நீதிமன்றம் தண்டனைக்கு தடைவிதிப்பு.....

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் அதை டெல்லி நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது
.
 

nirbaya murder case death sentence stop by delhi high court

குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தூக்குதண்டனையை குறைக்கக்கோரி குடியுரசு தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியிருந்தார். இதனால், கருணை மனுவைக் காரணம் காட்டி 4 பேரின் தண்டனைக்கும் இடைக்காலத் தடை விதித்தது டெல்லி நீதிமன்றம்.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை இல்லை: திடீர் முடிவின் விவரம் என்ன?
நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

nirbaya murder case death sentence stop by delhi high court
குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையை குறைக்கக்கோரி குடியுரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி இருப்பதால், தண்டனை வரும்22-ம் தேதி நிறைவேற்றப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ல் டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். 

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்கமால் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தில் ராம் சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட ராம் சிங் திஹார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 

nirbaya murder case death sentence stop by delhi high court

2013 செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. மேலும், டெல்லி நீதிமன்ற தீர்ப்பை உயர் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
இதற்கிடையே குற்றவாளிகளுக்கான தண்டனையை விரைவாக நிறைவேற்ற உத்தரவிடக்கோரி நிர்பயாவின் தாயார் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இம்மாதம் 22ம் தேதி காலை 7 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார். 

nirbaya murder case death sentence stop by delhi high court
இந்நிலையில், தங்களது தண்டனை மறுசீராய்வுக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா தாக்கல் செய்தனர். ஆனால் மறுசீராய்வு மனுக்களை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வரும் 22ம் தேதி அவர்கள் தூக்கிலிடப்போவது உறுதியானது. 


இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் நேற்று தூக்கு தண்டனை ரத்துசெய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். திஹார் சிறை விதிமுறைப்படி, தூக்கு தண்டனைக் கைதி ஒருவர் கருணை மனுத் தாக்கல் செய்தால், அந்தமனுவுக்கு பதில் கிடைக்கும் வரை அதாவது, குடியுரசுத் தலைவர் முடிவு செய்யும் வரை தண்டனை நிறைவேற்றப்படாது. 

nirbaya murder case death sentence stop by delhi high court
இந்நிலையில் டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி விசாரணை நீதிமன்றத்தில் முகேஷ் சிங் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, கருணை மனுத்தாக்கல் செய்துள்ளதால் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “ நாங்கள் வழங்கிய தீர்ப்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை. குடியுரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால் வரும் 22-ம் தேதி நிறைவேற்றப்படும் தண்டனைக்கு தடை விதிக்கிறேன். 

திஹார் சிறை அதிகாரிகள் வரும் 22-ம் தேதி இவர்கள் 4 பேரும் தூக்கிலிடப்படமாட்டார்கள் என அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இதனிடையே இந்த 4 பேருக்கும் தூக்கிலிடும் புதிய தேதியை அறிவிக்கக் கோரி திஹார் சிறை அதிகாரிகளும் டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்னர். 

மேலும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குற்றவாளி முகேஷ்சிங்  அனுப்பிய கருணை மனுவை பரிசீலிக்க கூடாது, அதை நிராகரிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி அரசும் பரிந்துரை செய்துள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios