கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமினில் உள்ள நிர்மலா தேவி, நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்ததாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைதாகி ஓர் ஆண்டு சிறைக்குப் பின் ஜாமினில் உள்ளார். வழக்கு தொடர்பாக கடந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி அருள் வந்ததாக கூறி நீதிமன்ற வளாகத்தில் சர்ச்சையை கிளப்பினார்.

குறி சொல்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது நடவடிக்கையால் பலரும் சந்தேகம் அடைந்தனர். மனதளவில் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆறு நாட்கள் தங்கி அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.