Asianet News TamilAsianet News Tamil

தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு.! தமிழக டிஜிபியை சந்தித்த என்ஐஏ இயக்குனர்..? திடீர் ஆலோசனைக்கு காரணம் என்ன.?

கோவை மற்றும் மங்களூரில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் என்.ஐ.ஏ இயக்குனர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். 
 

NIA director consults with DGP Tamil Nadu regarding blasts in southern states
Author
First Published Nov 30, 2022, 8:08 AM IST

தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு

கோவை உக்கடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது தவறுதலாக குண்டு வெடித்து சிதறியது தெரியவந்தது. இதனையடுத்து ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து  இந்த வழக்கு என்.ஐ.ஏ பிரிவுக்கு மாற்றப்பட்டு, இந்த வழக்கில் தொடர்புடையதாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

NIA director consults with DGP Tamil Nadu regarding blasts in southern states

குற்றவாளி கைது

இதனைத்தொடர்ந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து  மாநில போலீசார் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 19ஆம் தேதி மீண்டும் மங்களூரில் ஆட்டோவில் இருந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த குண்டுவெடிப்பில் தீவிரவாதி ஷாரிக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர். இதனையடுத்து இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாத சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் தமிழகத்தில் பல இடங்களில் தங்கி இருந்தது என்.ஐ.ஏ மற்றும் மங்களூர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மருத்துவமனை லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..! அவசரகால கதவு வழியாக வெளியேறியதால் பரபரப்பு

NIA director consults with DGP Tamil Nadu regarding blasts in southern states

என்ஐஏ இயக்குனர் ஆலோசனை

தொடர்ச்சியாக  தென்னிந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தேறிய நிலையில் இன்று  தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை என்.ஐ.ஏ இயக்குனர் தினகர் குப்தா சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் உளவுத்துறை அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

அதிகார திமிரு!பதவி மமதையில் ஒருவராக ஆட்டம் போடாதீங்க ஆளுநரே?ஆன்லைன் சூதாட்டத்தை மறைமுக ஆதரிக்கிறீர்களா?சீமான்

Follow Us:
Download App:
  • android
  • ios