தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(24). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாளமுத்து நகர் பகுதியில் உள்ள பாலதண்டாயுத நகரை சேர்ந்த மாரிசெல்விக்கும்(19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் புதுப்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனைவி மீது தீராத சந்தேகம்
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(24). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாளமுத்து நகர் பகுதியில் உள்ள பாலதண்டாயுத நகரை சேர்ந்த மாரிசெல்விக்கும்(19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி அண்ணா நகரில் வசித்து வந்தனர். மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- சித்தாளை கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்த பெயிண்டர்.. இறுதியில் நேர்ந்த பயங்கர சம்பவம்..!

இதையடுத்து பொன்ராஜ், மாரியம்மாளுக்கு போன் செய்து ``உங்கள் மகள் என்னுடன் சரியாக குடும்பம் நடத்த மறுக்கிறாள், அடுத்த ஆண்களுடன் போனில் பேசுகிறாள். எனவே அவளை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அதன்பிறகு வந்து அவளை அழைத்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள், அண்ணாநகர் சென்று மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, மகளை அழைத்து செல்லுமாறு மருமகனிடம் மாமியார் கூறியுள்ளார்.
இளம்பெண் குத்திக்கொலை
அதற்கு மருமகன் பொன்ராஜ் இனிமேல் உன் மகள் எனக்கு வேண்டாம், அவள் மற்ற ஆணுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இந்நிலையில், அதிகாலை தாளமுத்து நகரில் மாமியார் வீட்டிற்கு வந்த பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமார் (22), மந்திரமூர்த்தி ஆகியோர் கதவை தட்டி அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளனர். பின்னர் மாரிசெல்வியை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்த பொன்ராஜ், அவரிடம் பேசுவது போல் நடித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
இதையும் படிங்க;- கண்டவன்கிட்ட கள்ளத்தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலி.. 45 வயது ஆண்டியால் 28 வயது இளைஞர் செய்த காரியம்..!

தனிப்படை தீவிர தேடுதல்
தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் இதனை தடுக்க வந்த மாமியார் மாரியம்மாளுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரிசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 5 மாதமே ஆவதால் தூத்துக்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.
