பாசத்துக்கு மட்டுமில்லை பயத்துக்கும் செம்ம பிராண்டான மண் என்றால் அது திருநெல்வேலிதான். பொழுது போய் பொழுது விடிந்தால் கொலை வழக்கு ஃபைல் பண்ணுவதே இந்த மாவட்டத்தை சேர்ந்த போலீஸுக்கு பொழப்பாகவும், பொழுது போக்காகவும் இருக்கும். கொலை விழாத நாளே கிடையாது. சாதிக்காக நடக்கிற கொலைகள்தான் இந்த ஊரில் அதிகம். ’உன் சாதி பெருசா! என் சாதி பெருசா?’ எனும் சண்டையில் சரமாரியாக வெட்டிக் கொள்வார்கள். ஆனால் ஒரே சாதிக்குள் வெட்டு குத்து விழுவதும் திருநெல்வேலியில் சகஜம்தான். அதற்கு காரணம், அநேகமாக பெண் விவகாரமாகத்தான் இருக்கும். அக்காள கிண்டலடிச்சுட்டான், தங்கச்சியை லவ் பண்ணிட்டான், அத்தை மேலே கை வெச்சுட்டான், என் லவ்வருக்கு அவன் லெட்டர் கொடுத்துட்டான்! என்று பெண் காரணங்களுக்காக கன்னாபின்னாவென சீவிவிடுவார்கள். 


அந்த ரூட்டில் சமீபத்தில் திருநெல்வேலியில் குறுக்குத்துறை அருகே நம்பிராஜ் எனும் இளைஞன் கொலை செய்யப்பட்டு, ரயில்வே டிராக்கில் போடப்பட்ட, ஒரு ரயில் ஏறியதில், பிணத்தின் தலை துண்டாகிப் போனது. நம்பிராஜை கொலை செய்ததற்காக செல்லச்சாமி, செல்லத்துரை உள்ளிட்ட ஐந்து இளைஞர்களை போலீஸ் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையிலடைத்துள்ளது. சரி, ஏன் இவர்கள் கொலை செய்தார்கள்? அதுதான் மேட்டரே.... இந்த கொலை வழக்கில் நம்பர் 1 குற்றவாளியான செல்லச்சாமியின் ஊரை சேர்ந்தவர்தான், ஒரே சாதியை சேர்ந்தவர்தான் கொல்லப்பட்ட நம்பிராஜ். ஆனால் செல்லச்சாமியின் தங்கச்சி வான்மதியும் நம்பியும்  லவ் பண்ணியிருக்கிறார்கள். இது செல்லச்சாமிக்கு பிடிக்காமல் போக எச்சரித்திருக்கிறார். ஆனால் நம்பி அடங்கல. ஒரு கட்டத்தில் ‘என் தங்கசிச் கூட பழகுறதை நிறுத்து. இல்லேன்னா உன் தலையை அறுத்துடுவேன்!’ என்றாராம். ஆனாலும் தொடர்ந்திருக்கிறது லவ். 


இந்த நிலையில் வான்மதிக்கு மாப்பிள்ளை தேட துவங்கியது அக்குடும்பம். உடனே ‘உன் தங்கச்சிய இன்னைக்கு நைட்டே தூக்குறேன்’ என்று செல்லச்சாமியிடம் சவால் விட்ட நம்பிராஜ், சொன்னபடியே வான்மதியை அழைத்துக் கொண்டு எஸ்கேப்பாகி, திருமணமும் செய்துவிட்டார். கிராமத்தில் இருந்தால் சிக்கல், என்று திருநல்வேலியில் போய் தனிக்குடித்தனம் நடத்தியிருக்கின்றனர். இதில் செல்லச்சாமிக்கு கடும் ஆத்திரம் என்றாலும், அமைதியாக  இருந்திருக்கிறார். வான்மதி வீட்டை சமாதானம் செய்து, நிம்மதியாய் வாழ்க்கையை ஓட்ட நினைக்காத நம்பிராஜ் தேவையில்லாமல் டிக்டாக் வழியே ஒரண்டை இழுத்திருக்கிறார். எப்படி தெரியுமா?, கையில் ஒரு அரிவாளை வெச்சுக்கிட்டு ‘என்னை அந்த ஊர்ல வெச்சே ஒண்ணும் பண்ண முடியலை!ப் வெளியூர்ல வந்தா பண்ணிடுவ?’ என்று டிக்டாக் போட்டு செல்லச்சாமியை தூண்டியிருக்கிறார். இந்த டிக்டாக் மறுகால்குறிச்சியில் வைரலாகி இருக்கிறது. 


உடனே ‘நீயெல்லாம் பிரச்னைனாதான் ஆளை காலி பண்ணுவ. ஆனா நானெல்லாம் ஆளை காலி பண்ணிட்டுதான் பிரச்னை பண்ணுவேன்’ என்று அடுத்த டிக்டாக் போட்டிருக்கிறார். இதில் செல்லச்சாமி அண்ட்கோ உச்ச கோபத்துக்கு போனது. இந்த நிலையில் நம்பிராஜின் ஃப்ரெண்டான கானா சங்கர் லவ் ஃபெயிலியரில் தற்கொலை செய்துவிட்டார். நண்பனோட பொணத்தை பார்ப்பதற்காக ஊருக்கு வந்த நம்பிராஜ், சுடுகாட்டில் வைத்து நேருக்கு நேராக செல்லச்சாமியிடம் பிரச்னை இழுத்தாராம்.  
இவனை இனி விடவே கூடாது! என்று கொதித்த செல்லச்சாமி, தன் நண்பர்களுடன் சேர்ந்து அதே சுடுகாட்டில் வைத்து மர்டருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார். அதன் பின் நம்பிராஜுக்கு ஒரு நெருக்கமான நண்பரை வைத்து, அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அழைத்து வர செய்தவர்கள், ஒதுக்குப் புறமாக வைத்து நம்பியின் கதையை முடித்து, தண்டவாளத்தில் படுக்க வைத்துவிட்டனர்.

தங்கச்சிய தூக்கிட்டு போன நம்பி, அத்தோட விட்டிருக்கலாம்! என்கின்றனர் ஊர்க்காரர்கள். ஆனால் தன் கணவனை கொன்ற அண்ணனையும் வான்மதியும், நம்பிராஜின் கொலைக்காக பழியெடுக்க அவரது குடும்பமும் கருவிக் கொண்டிருப்பதுதான் லேட்டஸ் ஹாட்டஸ்ட்.