திருமணமான  6 நாட்களில்  இளம்பெண்  தனி அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் கம்பத்தில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ராஜா, அவருக்கு  சேதுபதி என்ற மகன் உள்ளார் .  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்  என்பவரின் மகள் சிவசக்திக்கும் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .  திருமணமான கையோடு  சேதுபதி சிவசக்தி தம்பதியினர் வீட்டின் மொட்டை மாடியில்  உள்ள அறைக்கு குடியேறினர்.  திருமணமாகி  ஐந்து நாட்களே ஆன  நிலையில் கணவர் வெளியூர் வேலை காரணமாக சென்று விட்டார். இதனால்  சிவசக்தி மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று  முனுதினம்,   நீண்ட நேரம் ஆகியும்  வீட்டின் கீழ் அறைக்கு சிவ சக்தி வரவில்லை. 

இதனால்,  சந்தேகமடைந்த மாமியார்,  மொட்டை மாடி அறைக்கு சென்று சிவசக்தியை அழைத்துள்ளார். ஆனால் கதவு திறக்கவில்லை குரலும் கேட்கவில்லை.  இதனால்  அவரது மாமியார் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது,  துப்பட்டாவில் தொங்கிய நிலையில் இருந்தால் சிவசக்தி, மருமகளின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மாமியார், ஓவென கதறினார். அவரின் கதறல் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து பார்த்து அவர்களும் அதிர்ந்தனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிவசக்தியை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இச்சம்பவம்  குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,   சிவசக்தி தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது . ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.  திருமணமாகி ஐந்து நாட்களில் இளம்பெண் இறந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . திருமணமாகி வெறும் 6 நாடுகளில் புத்ப்பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப் பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.