புழல் அருகே பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வந்தும், கல்யாணத்திற்கு பின்பும் தொல்லை கொடுத்து வந்த புதுமாப்பிள்ளையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் மணிகண்டன் என்பவர், அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். மணிகண்டன் இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்ன மணிகண்டனுக்கு கல்யாணம் நடந்தது. 

புதுமனைவி இருந்தாலும், பிளஸ் 2 மாணவி மீது  ஆசை, நினைப்பு குறையவில்லை, இந்நிலையில் கடந்த சில நாட்களாக மணிகண்டன் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த மாணவி மணிகண்டன் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் மற்றும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் சந்தியா மகேஸ்வரியிடம் நேற்று முன்தினம் புழல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் புழல் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரித்ததில் அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீஸ்.